ஆம். இந்தியா என்பது ஒரே நாடு. ஆனால், அந்த ஒரே நாட்டை பல கூறுகளாகப் பிரித்து கையாண்டால்தானே நம்மால் பல விஷயங்களை நிர்வாகம் செய்ய இயலும்.

நன்றி Google

இந்தக் கட்டுரையில், பல்வேறு காரணங்களுக்காக நாம் எப்படியெல்லாம் இந்தியாவைப் பிரித்துக் கையாள்கிறோம் என்பதை சற்று அலசலாமே..!

அரசியல்ரீதியாக இந்தியா பிரிக்கப்பட்டுள்ளது குறித்து நாம் நமது பாடப்புத்தகங்களிலேயே படித்திருக்கிறோம். எனவே, அரசியல்ரீதியான பிரிவுகளை இப்போதைக்கு ஒதுக்கிவிட்டு, நம்மில் பலரும் பொதுவாக கவனம் செலுத்தாத வேறுசில பிரிவுகள் குறித்து இப்போது பார்க்கலாம் என்பது எனது எண்ணம். உங்களுக்கு…?

சரி… பரவாயில்லை. நீங்களும் தயாராகத்தான் இருக்கிறீர்கள் என்பது புரிகிறது. நான் எனது வேலையைத் தொடங்குகிறேன்.
முதலில், வாகனங்கள் என்பதிலிருந்து நமது ஆய்வைத் துவங்குவோம். Vehicle என்ற ஆங்கிலச் சொல்லின் மூலம் (origin) எதிலிருந்து வந்திருக்கும்?

சரி…சரி… இதற்கெல்லாம் எதற்கு பெரிதாக யோசிக்க வேண்டும் என்கிறீர்களா? பொதுவாக, லத்தீன் அல்லது கிரேக்கம் என்பதுதானே உங்கள் பதில்.

ஆங்கிலம் என்பது ஒரு தனித்துவமான மொழி இல்லை என்றாலும், அதனைப் பேசிய மக்கள் உலகின் பல பகுதிகளை ஆண்டதால், இப்போதும் பெரியளவில் ஆதிக்கம் செலுத்துவதால், அம்மொழியில் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்படுவதால், அந்த மொழி உலகை ஆள்கிறது.

சரி, விஷயத்திற்கு வருவோம்.

லத்தீன் மொழியின் Vehiculum என்ற வார்த்தைதான் அதன் ‘மூலம்’. இந்த Vehiculum என்பது Vehere (to carry) என்பதிலிருந்து வந்தது. சமஸ்கிருதத்தில் Vaahana என்ற வார்த்தை நினைவிற்கு வருகிறதா? இந்த Vaahana என்பதற்கான மூலச் சொல் Vah.
ஒரு வாகனம் என்பது செய்வது என்ன? மனிதர்கள் மற்றும் பல்வேறு பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்வது.

ஆக, வாகனம் என்பது புவியியல் என்ற வெளியில் இடம்பெயர்ந்து கொண்டுள்ளது..!

ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில்புரட்சி மற்றும் அதனையொட்டிய விஞ்ஞான மேம்பாடுகளின் விளைவாக, வாகன தொழில்நுட்பம் பெரிதும் வளர்ச்சியடைந்து வருகிறது.

இதன்விளைவாக, விதவிதமான மற்றும் நவீன மோட்டார் வாகனங்களின், பொதுவாக சாலைவழி வாகனங்களின் பெருக்கம் நாம் வாழும் உலகில் மிகவும் அதிகரித்து வருகிறது. இவற்றின் ஒரு பயன்விளைவாக, நம்மால் மிக அதிக தூரத்தை, குறைந்த நேரத்தில், குறைவான கட்டணத்தில் கடந்துவிட முடிகிறது என்பதை நினைக்கையில் ஆச்சர்யம் எழாமல் இருக்குமா..!

இந்தப் போக்கானது, நமது பண்பாட்டிலும் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் எந்த மூலையிலிருந்தாலும், மற்றொரு மூலையில் வாழும் மனிதர்களிடம், நேரடியான தொடர்பை எளிதாக ஏற்படுத்தித் தருகின்றன இந்த அதிவிரைவு மோட்டார் வாகனங்கள்.

அதிகரித்துவிட்ட போக்குவரத்திற்கு ஏற்ப, விஸ்தரிக்கப்பட்ட சாலை வசதிகளும், அதிகளவு எரிபொருளும் மற்றும் இவைதொடர்பான இதர வசதிகளும் கட்டாயம் தேவைப்படுகின்றன.

இவற்றையெல்லாம் நாம் நினைத்தவுடன் மாயாஜாலம் மாதிரி செய்துவிட முடியாதல்லவா..! பணம் வேண்டாமா?
எனவேதான், நாம் பயன்படுத்தும் வாகனங்களுக்கு வரி விதிக்கின்றன அரசுகள்.

வாகனங்களுக்கு வரிவிதிக்க வேண்டுமென்றாலும் அதற்கென்று தனி நடைமுறைகள் இருக்கிறதல்லவா..! அதன்படி, எந்த வாகனத்தை யார் வைத்திருக்கிறார்கள்? மற்றும் அவர்கள் எங்கே வசிக்கிறார்கள்? என்பன போன்ற விபரங்கள் தேவைப்படுகின்றன.
அதாவது, ஒவ்வொரு வாகனத்திற்கும் தெளிவான அடையாளம் தேவைப்படுகிறது.

நன்றி Google

இதன்படி, ஒரு குறிப்பிட்ட வாகனம் விபத்திற்கு உள்ளானாலோ அல்லது திருடு போய்விட்டாலோ, அந்த வாகனத்திற்கு யார் பொறுப்பு என்பதை எளிதாகக் கண்டறியலாம். இந்தியாவில் ஓடுகின்ற அனைத்து வாகனங்கள் குறித்த பட்டியலையும், ஒரே இடத்தில், உதாரணமாக, டெல்லியில் பராமரிப்பது குறித்து சற்று கற்பனை செய்யுங்களேன்.

முடியவில்லையா…தலை சுற்றுகிறதா..!

ஏனெனில், நம் நாட்டில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை அந்தளவிற்கு அதிகமாய் உள்ளது.  எனவே, ஒரே இடத்தில் அனைத்து வாகனங்கள் குறித்த விபரங்களை சேமிப்பதெல்லாம் கற்பனையில்கூட சாத்தியமில்லைதான்.

சாதாரண மொபெட்டிலிருந்து புல்லட் வரை, சிறிய காரிலிருந்து பெரிய டிரக் வரை என்று எவ்வளவோ…எவ்வளவோ…!

எனவே, வாகன விபரங்களை பராமரிக்க, நாம் இந்தியாவை வகைப்பிரிக்க வேண்டியுள்ளது. இந்த வகைப்பாட்டிற்கு ரொம்ப யோசிக்கவெல்லாம் தேவையில்லை. நாம் முதலில் பார்த்த, அரசியல் வகைப்பாட்டையே இதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒவ்வொரு மோட்டார் வாகனமும், அது தொடக்கநிலையில் இயங்குகின்ற மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திலேயே பதிவு செய்யப்படுகின்றது. இந்தவகையில், புவியியல் ரீதியில் பிணைக்கப்படுகிறது.

அந்தப் பிணைப்பானது, பின்னர் பலவகைகளில் விரிகிறது.
அதாவது, அந்தக் குறிப்பிட்ட வாகனம் பதிவுசெய்யப்பட்ட நகரம், எந்த பிராந்தியப் போக்குவரத்து அலுவலகத்தின் எல்லைக் கட்டுப்பாட்டில் அப்பகுதி வருகிறது மற்றும் அது எந்தவகை வாகனம் (தனியார், டாக்ஸி, வணிகப் போக்குவரத்து, அரசு வாகனம் போன்றவை) என்பதாக வகைப்படுத்தப்படும்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை, 2 எழுத்துக் குறியீடுகளால் அடையாளம் காட்டும் வரைபடத்தினை கீழே கண்டு அறியுங்கள்.

(வரைபடம்) please add map sir.

உதாரணமாக, நம்பர் பிளேட்டில் நாம் காணும் ஒரு எண்ணை எடுத்துக்கொண்டு, அதன் விபரங்களை பார்ப்போம்.

KA-05-EA-1234 என்ற எண்ணை இப்போது பிரித்துப் பொருளறிந்தால், நமக்கு கிடைப்பவை இவைதான்.

KA – கர்நாடகா

05 – பெங்களூர் (தெற்கு) ஜெயநகர்

E – தனியார் இருசக்கர வாகனம்

E என்பதற்கு பின்னால் இன்னொரு எழுத்து சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டு எழுத்துக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைக் குறிக்கலாம்.

1234 – இது குறிப்பிட்ட மோட்டார் வாகனத்திற்கான தனித்துவ எண். (அதிகபட்சம் 4 இலக்கங்கள்).

இந்த நம்பர் பிளேட்டில் இடம்பெற்றுள்ள புவியியல் அம்சங்கள் என்ன என்பதை இப்போது அறிந்திருப்பீர்களே..!

  • இந்தியா என்ற நாடு
  • கர்நாடகா என்ற அதன் மாநிலம்
  • பெங்களூரு என்ற அந்த மாநில தலைநகரம்
  • அந்த பெங்களூரு நகரத்தின் தெற்குப் பகுதி
  • அந்த தெற்குப் பகுதியில் அமைந்த ஒரு சிறிய பகுதியான ஜெயநகர்
  • வாகனத்தின் வகை
  • வாகனத்திற்கான தனித்துவ 4 இலக்க எண்

இந்த நம்பர் பிளேட் எண்ணின் மூலமாக, பிராந்தியப் போக்குவரத்து அலுவலகமானது, குறிப்பிட்ட வாகனம் மற்றும் அதன் உரிமையாளர் குறித்த இதர பல்வேறு தகவல்களையும் சேமித்து வைத்துக்கொள்கிறது.

நீங்கள் காணும் ஒவ்வொரு மோட்டார் வாகனமும் புவியியல் அடிப்படையிலேயே இயங்குகின்றன என்று சொன்னால் இப்போது ஒத்துக்கொள்வீர்கள்தானே..!

(முற்றும்)

Categories:

Tags:

No responses yet

Share your thoughts

%d bloggers like this: